Tuesday, 8 December 2020

எட்டு செகண்ட் முத்தம்

காதலுக்குப் பாதகம் விளைவிக்க கோபம், அகந்தை, பொறாமை, காலம், மொழி, இனம் என இயற்கை பலவற்றை உருவாக்கியிருக்கிறது. மனிதனும் தன் பங்குக்கு சாதியையும் மதத்தையும் உருவாக்கிவைத்திருக்கிறான். உலகின் பெரும்பாலான காதல் தோல்விகளுக்குக் காரணங்கள் இவைதாம். ஆனால், இந்தக் காதல் கதையின் முடிவுக்கு ஒரு எஸ்கலேட்டரின் படிகட்டுகள்தாம் காரணம்.

Thursday, 12 November 2020

நா. முத்துச்சரம் #4: நதிகள் காய்ந்தலும் காட்சிகள் காய்வதில்லை

திரைமொழியின் அழகு நாம் காண்பதிலும் கேட்பதிலும்தான் அடங்கியிருக்கிறது. ஒருவனின் மனத்துக்குள்ளேயே திகழும் மகிழ்ச்சியையோ சோகத்தையோ ஒரு புதினம் அல்லது சிறுகதை சில வரிகளிலும் பத்திகளிலும் விவரிக்கும் அளவுக்கான எளிமை திரைமொழிக்கு வாய்ப்பதில்லை. திரைப்படத்தின் படைப்பாளிகள் அதன் பார்வையாளர்களுக்கு அந்த மன ஓட்டங்களைக் கண்டிப்பாகக் காட்டவோ கேட்கவோ வைக்கவேண்டும்.

அப்படித்தான் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என, பல கலைஞர்களின் தேவை உருவாகிறது. ஒருவன் தனியாக ஒரு அறையில் இருப்பதைப் படமாக்கிவிட்டால் அவன் தனிமையிலும் துக்கத்திலும் இருப்பதை உணர்த்திவிடமுடியுமென்றால், மிஸ்டர் பீன்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். அப்படியென்றால் அவன் தனிமையையும் சோகத்தையும் பிற உள்ளுணர்வுகளையும் எப்படி பார்வையாளர்களிடம் கடத்துவது? அந்தக் கடத்தலை ஒளி ஒலி வடிவத்தில் செய்வதுதான் திரை கலை. 

Monday, 20 April 2020

இரயில் பயணங்களில் #1: அங்கமெங்கும் உயிரானவன்

ஒரு பாடல் எப்போதும் அந்தப் பாடலாகவே இருப்பதில்லை. நம்மோடு சேர்ந்தே அதுவும் வளர்கிறது. இது கிட்டத்தட்ட எல்லா கலைவடிவங்களுக்கும் பொருந்தும் என்றே நம்புகிறேன். முதிர்ச்சியற்ற பருவத்தில் ஒரு பாடல் என்றால் அதன் காட்சிகள்தாம். நாயகன் அணிந்திருக்கும் உடைகள், நாயகி தரும் முத்தம், அவர்களுக்குள் நிகழும் காமம்தான் பெரும்பாலும் சிறு வயதில் முதலில் ஈர்க்கும். நம் உடலும், மனமும் ஒருங்கே ஒரு பருவத்தை எட்டும் வரை பாடலின் மொழி நமக்கு வசப்படுவதில்லை. அப்படிச் சொற்கள் வசப்படும்போது காட்சிகள் தேவைப்படுவதில்லை.

'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் 'தாலாட்டும் காற்றே வா' பாடல் அப்படி என்னோடு இணைந்து வளர்ந்த பாடல். ஆரம்பத்தில் எனக்கு அது ஒரு 'ட்ரெயின் பாட்டு' மட்டும்தான். திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்குப் பேருந்தில் செல்லும்போது சாலைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டித் தடத்தையும், எனக்கு நல்லநேரம் இருந்தால் அதில் தற்செயலாகச் செல்லும் ஏதோவொரு தொடர்வண்டியையும் பார்த்து இந்தப் பாடலைப் பாடியது முதற்பருவம்.

Wednesday, 29 January 2020

சந்தோஷ் ஏன் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்?

அடேய் சந்தோஷ்,

கண்டவுடன் காதலில் உனக்கு நம்பிக்கையில்லை என எனக்குத் தெரியும். ஒரு பெண்ணைப் பார்த்த நொடியிலேயே ஆணுக்கு எழும் காதல் உன் பகுத்தறிவுக்குப் புலப்படாத உணர்வாகவே இருந்துவந்தது. இப்போதும் அப்படியே இருக்கிறது என்றே நம்புகிறேன். பல முறை காதலில் விழுந்து, எழுந்தவன் என்றபோதிலும் இந்த வகைக் காதல் கதைகள் மட்டும் உன்னை எப்போதும் வேடிக்கைக்குள்ளேயே ஆழ்த்தியிருக்கின்றன.

Monday, 20 January 2020

1917: போர்த் 'திரைப்படத்' தொழில் பழகு

புதிதாக வெளியான படங்கள், பழைய படங்கள் என ஓராண்டில் குறைந்தது 350 படங்களையாவது கண்டுவிடுகிறேன். என்றாலும், திரைப்படம் என்பது, கதை சொல்லும் கலையா, இல்லையென்றால் தொழில்நுட்பங்களால் அந்தக் கதைகளை ஒரு பேரனுபவமாக மாற்றும் கலையா என்ற விவாதம் எனக்குள்ளே நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. கண்டிப்பாக இந்த இரண்டுக்கும் இடையே, இரண்டு நிலைகளையுமே ஒத்த, அந்தந்த காலக்கட்டத்துக்கான தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றவாறு தன் வடிவத்தையும் மேம்படுத்திக்கொள்ளும் கலை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன்.