எண்ணாது துணிந்த கருமம் | Tamil Short Story

அதுவொரு பரபரப்பான பன்னாட்டு நிறுவனம். பல்லாயிரம் பணியாளர்களைக் கொண்டதும்கூட. அந்த ஊழியர்களெல்லாம் சிறப்பாக பணியாற்றி அந்நிறுவனத்தின் முதலீடுகளை இரட்டித்துக்கொண்டிருந்தனர். பிற நிறுவனங்களெல்லாம் அதிக வரவு ஈட்ட தங்கள் தயாரிப்புகளில் கலப்படம் செய்தபோதுகூட இந்த நிறுவனம் மட்டும் நேர்மையான முறையில் வணிகம் செய்து வந்தது. அதன் பணியாளர்களை அந்த நிறுவனம் சரியான முறையில் நடத்தியும் வந்தது. நான் உனக்கு மேலதிகாரி, நீ எனக்கு கீழ் வேலை பார்ப்பவன் என்ற எண்ணம் இல்லாமல் அனைவரும் நிறுவனத்தின் ஊழியர்கள் என்ற நிலையிலேயே பணிபுரிந்தனர்.

அவள் இட்ட ஆயிரம் முத்தங்கள்! | Tamil Article

அவளைப் பிரிந்து நாட்கள் ஓடிவிட்டன. எங்களுக்குள் இருந்த தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, இப்போது அவள் என் வாழ்வில் மீண்டுமொரு அங்கம்வகிப்பாளா என்ற வினாவுக்கு விடையறியாது உலாவிக்கொண்டிருக்கிறேன். இனியும் அவளுடன் இணைவதென்பது விகிதாச்சார அடிப்படையில் நிகழ்வதரிது என்ற ஏக்கத்தில்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

தென்றலுக்கு மூச்சுமுட்டுகிறது | Tamil Article

மூன்றாவது மாடியிலிருந்து என்றாவது நீங்கள் வீட்டுக்குவெளியே, சன்னல்வழியே எட்டிப்பார்த்ததுண்டா? பார்த்ததில்லையென்றால் உடனே பாருங்கள்.