அது 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள். அன்றைய பிரிட்டன் தேசம் அந்த ஒலிம்பிக்கின் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கவில்லை. அது அதன் பிறகு வந்த 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வரை எந்த ஒலிம்பிக் ஹாக்கியிலும் பங்கேற்கவில்லை. காரணம், இந்தியாதான் அன்று ஹாக்கியின் உலக சாம்பியன்.
சமீப காலமாக தமிழ்த் திரை உலகம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஷாருக், மோகன்லால், மம்மூட்டி, ஆமிர் கான், போன்ற பிற மொழித் திரை உலக சூப்பர் ஸ்டார்கள் இங்கே தமிழகத்தை குறி வைத்து தங்கள் நிலைப்பாட்டை வெள்ளித்திரையில் பலமாக்க முயற்சிக்கிறார்கள்.
நேற்று கல்லூரி விட்டு வீடு திரும்பியவுடன் சற்று இளைப்பாற தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்துக்கொண்டிருந்தன். அப்போது ஒரு தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக சனி மற்றும் ஞாயிறு மாலை வேளைகளில் திரைப்படங்களை ஒளிபரப்பி நம் நேரத்தை எடுத்துக்கொள்ளும் தொலைக்காட்சி, நேற்றும் என் நேரத்தைப் பறித்துக்கொண்டது.
இந்த வார ஆனந்த விகடன் இதழில் சென்ற வருடத்தின் சிறந்தவர்களுக்கும் சிறந்தவைகளுக்கும் விகடன் விருதுகள் அறிவிக்கப்பட்டது சினிமா விருதுகளும் அடங்கும். அந்த வரிசையில் 2013இன் சிறந்த பின்னணிப் பாடகர் விருது ஹரிஹரசுதன் என்ற ஒரு பாடகருக்கு வழங்கப்பட்டது.