காதலின் பிரிவைப் பாரதிதாசன் ஒரு அழகான உவமையைக் கையாண்டு பாடலாக்குகிறார். கணவனைப் பிரிந்து அவன் வருகையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் மனைவி அவள். அவன் வரும் தெருவைப் பார்த்தபடியே வீட்டின் வாசற்கதவைத் திறந்துவைத்து அங்கேயே காத்துக்கொண்டிருந்த அவள், ஒரு கட்டத்தில் அந்தக் கதவாகவே மாறிப்போகிறாள் என்கிறார்.
இதில் வியக்க ஒன்றுமில்லை. கதவுக்குப் பதிலாக அங்கே நின்றுகொண்டிருப்பதால், அவளே அந்தக் கதவாகிறாள் என்பது அந்தக் கவிதையின் உட்கருந்து.
அந்த வீட்டுக்குக் கதவு தேவையில்லை. அவன் வரும்வரை 'பேதை தெருவில் கருமரத்தால் செய்த கதவு' என்பது வெறும் உவமையல்ல, அது பிரிவின் ஆழம்.
காலங்கள் மாறுகின்றன. காதலர்களின் வாழ்க்கைமுறையும் மாறுகிறது. பாலின வேறுபாடின்றி தத்தம் கனவுகளைத் துரத்திக்கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அதேபோன்ற ஒரு சூழல். ஆனால், காதலுக்குள் பிரிவு ஏற்பட்ட காலம் போன்றில்லை இது. இங்கே சேர்ந்தே பிரிந்திருக்கும் இருவருக்கிடையே காதல் நிகழ முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டபின் வாழ்வை இணைந்து வாழத் துவங்கலாம் என்ற முடிவுடன் இருக்கும் இருவர். வீட்டார் பார்த்து நடத்திவைத்தத் திருமணமல்லவா.
இந்தச் சூழ்நிலைக்குப் பாடல் எழுத முற்படும்போது நா. முத்துக்குமாருக்கும் பாரதிதாசனின் 'கதவாகவே மாறிய காதலி' தான் வழி காட்டுகிறாள். ஆனால் எப்போது சேரப்போகிறோமோ என இருவருமே எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால், காதலனை ஒருபாதி கதவென்றும், காதலி மறுபாதி கதவெனவும், இருவரையுமே கதவாக்குகிறார். ஆனால் அதோடு விட்டுவிடாமல், பாடல் முழுவதும் முத்துக்குமார், கதவுகளின் வெவ்வேறு பண்புகளை வெவ்வேறு சூழநிலைகளுக்குள் பொருத்திப்பார்க்கிறார்.
இருவரும் ஒரே வாசற்கதவின் இருவேறு பாதிகளாக இருப்பதிலிருந்தே தங்கள் வாழ்வில் அவர்களுக்கான சமமான பங்கு விவரிக்கப்படுகிறது. அதை ஒத்தே பல்லவிக்கு முற்பகுதியிலும் 'நீ என்பதே நான் தானடி... நான் என்பதே நாம் தானடி' என்ற வரிகளும் எழுதப்பட்டுள்ளன. ஒருவரின் வாழ்வைப்பற்றி விளக்கவேண்டுமென்றால் அதில் மற்றொருவரைப் பற்றியும் கண்டிப்பாக பேசவேண்டியுள்ளது. அவனின்றி அவளில்லை. அவளை நீக்கிவிட்டால் அவன் முழுமையடப்போவதுமில்லை.
இப்படியிருக்கும் இருவருக்கிடையே காதல் நிகழ்வதற்குக் கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. ஒருவகையில் அது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. ஆனால் தன்னைத்தானே காட்டிக்கொள்ள சரியான நேரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். களவுக்குள்ளேயே கள்ளத்தனம்.
திறந்துவைக்கப்பட்டுள்ள கதவுகளைப்போன்று இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர், யாராவது சேர்த்துவைத்துவிடுவார்களா என்ற காத்திருப்பில். 'பார்த்துக்கொண்டே பிரிந்திருந்தோம்... சேர்த்துவைக்கக் காத்திருந்தோம்' என்று அவன் பாடுகிறான்.
ஆனால் அவளோ அதற்கு எதிர்மறையாக இருவரும் ஏற்கனவே அடைக்கப்பட்ட கதவுகளாகத்தான் இருக்கிறோம். அதனால் நமக்கிடையே காதல் நிகழாமலிருக்க நாமே தடையாக இருக்கிறோம் என்கிறாள். அப்போதுகூட காதலை நமக்குள்ளேயே ஒளித்துவைத்துக்கொண்டு தாழிடாத கதவுகளாகத்தான் காதல் அதுவாகவே நேர்ந்துவிடாதா என்ற எதிர்ப்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கிறோம் என்று பாடுகிறாள். 'தாழ்த்திறந்தே காத்திருந்தோம்... காற்றுவீசப் பார்த்திருந்தோம்' என்று காதலெனும் காற்று வீசி தடையை உடைத்து நாம் இணைவதற்கு வழி செய்யாதா என்று பாடுகிறாள்.
காதல் இருந்தும் மறைக்கின்ற காதலர்கள் இருவருக்கும் தத்தம் கண்ணோட்டங்களில் கதவுக்கு வேறுவேறு விளக்கமிருந்தாலும், வாழ்க்கையைப் பங்கிடுவதில் இருவரும் பப்பாதி கதவுகளாக இருப்பதையே விரும்புகின்றனர். 'ஒருபாதி கதவு நீயடி மறுபாதி கதவு நானடி' என அவனும், 'ஒருபாதி கதவு நீயடா மறுபாதி கதவு நானடா' என அவளும் மாறி மாறிப் பாடுகின்றார்கள்.
ஆனாலும் முதலில் கூறிய மாறுபட்ட கண்ணோட்டம் மேலும் தொடர்கிறது. இப்படிப் பிரிந்தே இருந்தாலும் ஏதோவொரு காரணத்துக்காக கண்டிப்பாக சேரத்தானே வேண்டும் என்பது அவன் நம்பிக்கை. 'இரவு வரும் திருட்டுபயம் கதவுகளைச் சேர்த்துவிடும்', அதுபோல் நாம் சேரவும் காரணம் கிடைக்காமலா போய்விடும் என்கிறான். ஆனால் தடையாக இருக்கும் கதவைத்திறக்க விரும்பும் அவளோ, 'கதவுகளைத் திருடிவிடும் அதிசயத்தைக் காதல் செய்யும்' என்று பாடுகிறாள். இங்கேதான் பாரதிதாசனை ஒத்து முத்துக்குமாரின் வரிகள் இடம்பெறுகின்றன. அன்று, அவன் வரும்வரை தெருநடையில் காத்திருக்கும் அவளே கதவானாள். அந்தக் காதலுக்குக் கதவு தேவைப்படவில்லை.
அதனால்தான் முத்துக்குமாரும் காதல் கதவுகளைத் திருடிவிடும் வல்லமை கொண்டவை என்று உறுதியாக நம்புகிறார்போலும்.
தொடர்ச்சியாக அவன் பாடுகிறான், இரவில், 'இரண்டும் கைக்கோர்த்து சேர்ந்தது... இடையில் பொய்ப்பூட்டு போனது' என்று. ஒரே வீட்டில் இத்தனை நெருக்கமாக, உள்ளிருக்கும் காதலை மறைத்து வாழும் காதலர்களுக்கிடையே இருக்கும் பிரிவு வெறும் கண்கட்டு. அதுதான் கதவுகளுக்கு இடையே பொய்யான பூட்டாக இருக்கிறது. காதலை உணர்ந்த மறுநொடி இப்பொய்ப்பூட்டு உடைகிறது என்பது கவிஞர் கருத்து. உடைந்ததும் அவள் எதிர்ப்பார்த்ததைப்போலவே கதவுகள் திறந்து 'வாசல் தள்ளாடுதே திண்டாடுதே கொண்டாடுதே' என்று அவள் காதல் நிகழும் முதல் நொடியின் இன்பத்தை விவரிக்கிறாள். அது அத்தனை இன்பமானது.
ஆனால் அந்த நிலைக்கு அவர்கள் எப்படி இழுத்து வரப்பட்டார்கள் என்பதையும் கூறவேண்டுமல்லவா. அதை இரண்டாம் சரணத்தில் காட்சிபடுத்துகிறார் முத்துக்குமார்.
இரு வீட்டாரால் பார்த்து, பேசி, முடிவு செய்யப்பட்டது இவர்கள் வாழ்க்கை. என்னதான் அம்மா அப்பாவாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் அவனையும் அவளையும் தவிர உலகின் மாந்தர் யாவரும் மூன்றாம் இனத்தவரே. ஆதலால் அவர்கள் முடிவு இங்கே மதிப்பிழக்கிறது. 'இடி இடித்தும் மழையடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்' என்ற வரி இதைத்தான் சொல்கிறது. ஊர் கூடி சேர்த்துவைத்தபோது கூட நமக்குள் அது நேரவில்லை.
ஆனால், புறவிசைகளை விட அகவிசை காதலில் வலியதல்லவா. அந்த இருவருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட தனிமையில், அவர்கள் வீட்டில், அவர்கள் படுக்கையறையில் என நெருக்கம் அதிகமாக இருக்கும் அத்தனைச் சுழலும் காதலை வெளிப்படுத்தாமலா போய்விடும். 'இன்றேனோ நம்மூச்சின் மென்காற்றில் இணந்துவிட்டோம்' என்பது இதுதான். கதவுகளைத் திறக்க காதலுக்கு மூன்றாம் இனத்தின் இடியோ மழையோ தேவையில்லை. அருகருகே இருக்கும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் வீசிக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றுபோதும். அந்த நெருக்கம் போதும்.
அதனால்தான் அடுத்த வரிகளில் அவர்கள் இருவரின் 'இதயம் ஒன்றாகி போனதே... கதவே இல்லாமல் ஆனாதே' என பாரதிதாசன் மீண்டும் எட்டிப்பார்க்கிறார். தங்கள் வாழ்க்கை காதலாக்கப்படும்போது கதவுகள் உடைபடுகிறது. அதுமுதல், 'இனிமேல்... நம் வீட்டிலே... பூங்காற்றுதான் தினம் வீசுமே' என இறுதியில் திறந்த வாசல் வழியாக இருவரும் காதலுக்கு வழிவிடுகிறார்கள். உண்மையில் கதவுகள் உடைபடும்வரை காதல் காத்திருக்கவேண்டும். அது உணர்வல்ல, நிகழ்வு.
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சனவரி 16, 2019.
படம்: தாண்டவம்
இயக்கம்: விஜய்
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

"விட்டுப் பிரியாதார் மேவும் ஒருபெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை தெருவில்
கருமரத்தால் செய்த கதவு"

No comments:
Post a Comment