பேரன்புக்குரிய வல்லாதிக்கத் தோழியே,
காதலுக்கும் உருவம் உள்ளதடி
என் காதலின் உயரம் ஐந்தரையடி
தாமரை கூட மலர்ந்ததை நான்
ஒருமுறை ரசித்ததுன் சிரிப்பிலடி
உன்னைப் படைத்திட்ட செய்முறையில்
நிலவும் இடையேவிளைந்ததடி
கதிரொளி பிறந்திடும் திசையிலல்ல
என் கிழக்கோ இருப்பதுன் கண்ணிலடி
இல்லத்தரசியர் சிக்கனத்தை
உன் குறுஞ்செய்தி பதில்கள் விஞ்சுமடி
ஆயிரம் மணித்துளி அரட்டையிலும்
நீ அள்ளித் தருவது மௌனமடி
உன் சிரிப்பின் சாரங்கள் யாவுமந்த
விண்மீன்களின் பாடத்திட்டமடி
நீ தவறி உதிர்த்தச் சொற்கள்கூட
என் வாழ்வுக்கு அடிப்படைச் சட்டமடி
உன் கூந்தற்பின்னல் அழகைக்கண்டு
மரபணுக்கள் வெட்கம் கொள்ளுமடி
மூக்கிலிருப்பது கண்ணாடியா
உன் இதயத்துக்கதுவே வாசற்படி
உண்மைக்கு என்றும் உவமையென
நான் மேற்கோளிடுவதுன் பண்பையடி
பெண்மைக்கென புதுச்சிறப்பு
நீ பிறந்திட்ட நொடியில் சேர்ந்ததடி
உன் மனதினில் இடம்பெற மேற்கொண்ட
என் முயற்சிகளெல்லாம் மந்தமடி
அச்சோகம் என்னைச் சூழ்ந்திடவே
இக்கவிதையில் தவறுது சந்தமடி
காதலி நீயென்றானதனால்
என் காதல் தோற்பினும் பெருமையடி
இதனினும் என் காதலைப் பாட
என்னிடம் சொல்லில்லை வறுமையடி
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூலை 20, 2018.
காதலுக்கும் உருவம் உள்ளதடி
என் காதலின் உயரம் ஐந்தரையடி
தாமரை கூட மலர்ந்ததை நான்
ஒருமுறை ரசித்ததுன் சிரிப்பிலடி
உன்னைப் படைத்திட்ட செய்முறையில்
நிலவும் இடையேவிளைந்ததடி
கதிரொளி பிறந்திடும் திசையிலல்ல
என் கிழக்கோ இருப்பதுன் கண்ணிலடி
இல்லத்தரசியர் சிக்கனத்தை
உன் குறுஞ்செய்தி பதில்கள் விஞ்சுமடி
ஆயிரம் மணித்துளி அரட்டையிலும்
நீ அள்ளித் தருவது மௌனமடி
உன் சிரிப்பின் சாரங்கள் யாவுமந்த
விண்மீன்களின் பாடத்திட்டமடி
நீ தவறி உதிர்த்தச் சொற்கள்கூட
என் வாழ்வுக்கு அடிப்படைச் சட்டமடி
உன் கூந்தற்பின்னல் அழகைக்கண்டு
மரபணுக்கள் வெட்கம் கொள்ளுமடி
மூக்கிலிருப்பது கண்ணாடியா
உன் இதயத்துக்கதுவே வாசற்படி
உண்மைக்கு என்றும் உவமையென
நான் மேற்கோளிடுவதுன் பண்பையடி
பெண்மைக்கென புதுச்சிறப்பு
நீ பிறந்திட்ட நொடியில் சேர்ந்ததடி
உன் மனதினில் இடம்பெற மேற்கொண்ட
என் முயற்சிகளெல்லாம் மந்தமடி
அச்சோகம் என்னைச் சூழ்ந்திடவே
இக்கவிதையில் தவறுது சந்தமடி
காதலி நீயென்றானதனால்
என் காதல் தோற்பினும் பெருமையடி
இதனினும் என் காதலைப் பாட
என்னிடம் சொல்லில்லை வறுமையடி
- சந்தோஷ் மாதேவன்,
சென்னை, சூலை 20, 2018.