ஒவ்வொரு முறையும் பாஜக அரசு தமிழகத்திலுள்ள எதாவதொரு சிக்கலைக் கையாளும்போதுமட்டும் புதியவொரு உத்தியை செயல்படுத்த முயன்று, பிறகு இங்கே நடக்கும் அரசியல் மற்றும் விவசாயிகள் போராட்டங்களைக் கண்டு அஞ்சி பின்வாங்கிவிடும். அல்லது காவிரிப் பிரச்சினையில் செய்தது போல் வாரியம் அமைக்கமுடியாது என்று ஒற்றைக்காலில் நின்றுவிடும்.
ஆனால், இப்போது மீத்தேன் திட்டத்தை கைவிடுகிறோம் என்ற அறிக்கையினை வெளியிட்டது விவசாயகளுக்கும், சூழலியல் போராளிகளுக்கும், தமிழ்த்தேசியவாதிகளுக்கும் ஏன் பாஜக ஆதரவாளர்களுக்குமே வியப்பின் உச்சமாகத் தான் உள்ளது. மறுபுறம், இது பிற்காலத்தில் பாஜக இடப்போகும் சூழ்ச்சிக் கோலத்துக்கான துவக்கப் புள்ளியோ என்ற ஐயமும் எழாமலில்லை.
கடந்த சில நாட்களாக இங்கே அரங்கேறிவரும் நிகழ்வுகளைக் காணும்போது இது எதற்கான தொடக்கமென்று ஊகிக்க முடியாதவாறுதானுள்ளது. 500, 1000 ரூபாய்த்தாட்களை மதிப்பிழக்கச் செய்து இப்போது மக்களை வங்கிகளின் பக்கம் இட்டுச் செல்வதும், வங்கிக் கணக்கே இல்லாத சாமானியனைக்கூட கணக்கினைத் துவக்க வைப்பதும், வாரத்துக்கு இவ்வுளவுதான் பணப்பரிமாற்றமென்று கட்டுப்படுத்துவதும், அடுத்த நாளே மீத்தேன் திட்டத்தைக் கைவிடுவதுமென்று ஒவ்வொரு நிகழ்வாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக நிகழும்போது இவையனைத்தையும் கோர்த்துப்பார்த்து இதன் பின் ஒளிந்திருக்கும் சூழ்ச்சித்தத்துவம் என்னவாக இருக்குமென்று சிந்திக்கத்தோன்றாமலுமில்லை.
ஒன்றைக் கவனித்துப் பார்த்தோமென்றால் புரியும். இன்று மக்களின் மொத்தப் பணமும் வங்கிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிட்டது. நான்காயிரம் ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது ஆனால் செலவு மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் செலவை காணல்பணத்தின் (Virtual Money) மூலமாக மட்டுமே செய்யயியலும். பற்றட்டையாகவோ, பேடியம் போன்ற தளங்களின் மூலமாகவோ அல்லது வலையிலோதான் பரிமாற்றம் செய்யமுடியும். இப்படிச் செய்யும்போது.
ஏற்கனவே இந்தியாவிலுள்ள வங்கிகளனைத்தும் இல்லுமினாட்டியின் இடைத்தரகர்கள் போல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் அரசின் இந்த அறிவிப்பும் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் மக்களை அவர்களே அறியாமல் சூழ்ச்சி வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கின்றனவோயென்றே தோன்றவைக்கின்றது.
சரி, இதற்கும் மீத்தேன் திட்டத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியுமென்று சிந்தித்தபோது ஒன்று தோன்றியது. இப்போது விவசாயத்துக்குத் தேவையான முகாமை முதலீடு பணம் மட்டுமல்ல. அதையும்தாண்டி நீர், நிலம் என்ற இரண்டும்தான். இதில் நீரை ஏற்கனவே தடுத்து நிறுத்தியாகிவிட்டது. பணத்தையும் வங்கியின் கட்டுக்குள் கொண்டு வந்தாகிவிட்டது. மீதம் இருப்பது நிலம் மட்டுமே. மீத்தேன் திட்டத்துக்காக அதைப் பறிப்பதில் தான் அரசுக்கு எவ்வளவு தடைகள்.
தேவையான மூன்று முதலீடுகளில் இரண்டை ஏற்கனவே கட்டுப்படுத்தியதைப் போல நிலத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் அடுத்த நடவடிக்கை என்னவாகயிருக்கும்? அவன் நிலத்தை அவனே விற்கவைக்கும் அளவுக்குண்டான கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவருவதுதான். பணமுமில்லை நீருமில்லை, நிலம் மட்டுமெதற்கு என்றவனை யோசிக்கவைத்து இறுதியில் அவன் நிலத்தை அவனே விற்கும் நிலைக்கு ஆளாகிவிடும் நிலைவரும் வாய்ப்புள்ளது. அப்படியாக இருக்குமெனில் விரைவில் மீத்தேன் எடுப்பதற்கான அத்தனை வேலைகளும் மீண்டும் துவங்கும் அப்போது நிலமனைத்தும் பெருமுதலாளிகளின் கைவசமிருக்கும்.
Santhosh Mathevan
திருச்சி, Nov 11, 2016.

No comments:
Post a Comment