Friday, 7 November 2014

நடிகராகவே வாழும் நடிகர்கள்

கடந்த சில நாட்களாக கத்தி திரைப்படம் பற்றி பல கருத்துக்களும் சர்ச்சைகளும் வெவ்வேறு தரப்பினரிடமிருந்து வெளிவருகின்றன.
அதில் ஒரு கருத்து….

அந்த திரைப்படதின் நாயகன் விஜய் அத்திரைப்படதில் ஒரு குளிர்பான நிறுவனத்தை எதிர்த்து குரல் கொடுப்பது போன்ற காட்சிகளில் நடித்துள்ளார். இதற்கு எதிராக பல கருதுக்கள் எழுந்துள்ளன.
அவரே அந்த நிறுவனத்தின் விளம்பரப் பிரமுகராக இருந்து கொண்டும், விளம்பரங்களில் அந்த குளிர்பானத்தை குடிக்கும் படியாகா நடித்தும், பின்பு அவரே இந்த படத்தில் அதை எதிர்த்தும் நடித்துள்ளார் என்று பல கருத்துக்கள் வந்துள்ளன.
ஆனால் உண்மை என்னவென்றால்…
திரைத் துறையில் இதெல்லாம் மரபாக நடந்துவரும் நிகழ்வுகள்.
ஒரு நடிகனோ, அல்லது நடிகையோ நாம் திரையில் காண்பதுபோல் இயல்பு வாழ்வில் இருப்பதில்லை. அது பற்றியே இக்கட்டுரை.
கல்விக்காக சேவை செய்வதாக கூறப்படும் நடிகர் சூர்யா, திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பங்குதாரர் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அப்பள்ளியின் பெரும்பான்மையான ஆண்டு விழாக்களில் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்த விழாக்களை நேரில் காண அந்த கல்வி நிறுவனம் அந்த பள்ளி மாணவர்களிடமே நுழைவுக்கட்டாணம் வாங்குகிறது. அது மட்டும் அல்லாது அப்பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு சேர்க்கை கட்டணத்தில்(donation) அந்த கல்வி நிறுவனம் கொள்ளை அடிப்பது ஊரறிந்த செய்தி.
இதில் சூர்யாவும் ஒரு பங்குதாரராக இருக்கலாம் என்பதற்கு அங்கே ஒரு சான்று உள்ளது. அப்பாள்ளியில் இருக்கும் ஒரு மழலையர் பூங்கவிற்கு "அகரம்"் எனப் பெயரிடப்பட்டுள்ளதை நானே கண்டுள்ளேன்.
இது பற்றி மேலும் தகவல்களை அறிந்துகொள்ள முற்பட்டபோது, சூர்யா மேலும் சில பொறியியல் கல்லூரிகளில் பங்குதாரராக இருப்பதாக சில வதந்திகள் வெளிவந்தன.
ஒருவேளை இது உண்மையென்றால் விஜயைப் போல இவரும் திரைக்கு அப்பால் முரண்பாடாகத்தான் வாழ்கிறார் என வைத்துக்கொள்ளலாமா??
சமூக சேவையை செய்பவர்கள் எப்போது தங்களை விளம்பரப் படுத்திக்கொள்கிறார்களோ, அப்போதே அவர்களின் சேவை தோற்றுப்போகிறது.
இதற்கும் ஒரு சான்று, இதே திரைத்துரையில் உள்ளது. நடிகர் விக்ரம், ஆண்டுக்கு மூன்று முதல் ஐந்து இதய நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சைக்கான கட்டணத்தை வழங்கி உதவி செய்கிறார். இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
சேவை செய்யும் அளவு இமயத்தையும் தாண்டி நின்றாலும் அது நம்மை விளம்பரப்படுதாதவாறு இருக்கவேண்டும்.
இதைப் பல காலமாக ஒரு பழமொழி வாயிலகவும் நாம் அறிந்து வருகிறோம்.
வலக்கை கொடுப்பது, இடக்கைக்குகூட தெரியக்கூடாது
அடுத்த நிகழ்வு...
தசாவதாரம் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அந்த இசைத் தகடை வெளியிட்டபின் நடிகர் கமல் நடந்துகொண்ட விதம்…
அந்தத் தகடு இருந்த காகிதத்தை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிடுவார் கமல். அதை ஜாக்கி சான் தான் தரையில் இருந்து எடுத்து ஒரு ஓரமாகப் போடுவார்.
வந்த ஒரு விருந்தாளி நம்மிடத்தைச் சுத்தம் செய்யும் அவலநிலையில் நாம் உள்ளோம்.
இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஒரு நடிகர்தான் இன்று சுத்தமான இந்தியாவுகாகக் குரல் கொடுக்கிறார். என்ன ஒரு வேடிக்கை.
ஆக, இது போன்ற முரண்பாடான கருத்துக்கள் திரைத்துறையின் பல்வேறு நடிகர்களாலும், பல்வேறு நிலைகளில் நடந்தேரி வருகிறது.
திரைத்துறையினர், திரையை விட இயல்பு வாழ்வில்தான் மிகச் செம்மையாக நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment