Wednesday, 8 January 2014

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் பெரும் நடிகர்கள்

சமீப காலமாக தமிழ்த் திரை உலகம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. ஷாருக், மோகன்லால், மம்மூட்டி, ஆமிர் கான், போன்ற பிற மொழித் திரை உலக சூப்பர் ஸ்டார்கள் இங்கே தமிழகத்தை குறி வைத்து தங்கள் நிலைப்பாட்டை வெள்ளித்திரையில் பலமாக்க முயற்சிக்கிறார்கள்.


சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் விளம்பர விழாவை சென்னையில் நடத்தியது அதற்குப்  பெரிய உதாரணம். பொதுவாக லண்டன் போன்ற அயல்நாட்டு நகரங்களில் நடத்தப்படும் ஷாருக்கின் படவிழாக்கள் முதல் முறையாக சென்னையில் நடைபெற்றது. இது ஏன் என்பதற்கு படக்குழுவினர் ஒரு காரணம் கூறினாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

  மோகன்லால் கடந்த சில வருடங்களாக மலையாள திரையுலகில் தோல்வியையே கண்டுவருகிறார். அவர் திடீர் என்று கமலுடன் இணைந்து உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்து, அதுவும் ஒரு துணை நடிகராக நடித்தது ஒரு வியக்கத்தக்க விடயமே.

  நடிகர் விஜயுடன் இணைந்து அவர் ஜில்லா திரைப்படத்தில் நடிக்கிறார். இது நாடறிந்த ஒரு செய்தி. இந்த இடத்தில நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். விஜய் அவர்களுக்கு கேரளாவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதை பலர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், அதுதான் உண்மை. விஜயின் இந்த மலையாள ரசிகர் கூட்டத்தை மையப்டுத்தி மோகன்லால் மீண்டும் தன்னுடைய புகழினை எற்றவிருக்கிறார் என்பதே உண்மை.

 அதுபோலவே, மம்மூட்டியும் தொலைந்த தன் புகழை மீண்டும் ஈட்ட வந்தே மாதரம் திரைப்படத்தில்  அர்ஜுனுடன் இணைந்து தமிழில் நடித்து, அந்தத் திரைப்படத்தை மலையாத்திலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். இதுபோன்று இவர் மூன்றாவது முறை செய்கிறார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

 இந்த காரணம்தான் ஷாருக் கதையிலும் இடம்பெறுகிறது. தொலைந்த தன் புகழை ஈட்ட அவர் தமிழகத்தை குறிவைத்திருக்கிறார். இப்படி எதாவது ஒரு வேறுபாட்டைக் காட்டினால்தான் திரையில் நிலைத்து நிற்க முடியும் என்பதே உண்மை. அதுமட்டுமில்லாமல், வடக்கில் அவருக்கு சிவ சேனை போன்ற கட்சிகளால் படவெளியிட்டுக்குச் சில பிரச்சினைகள் வரலாம் என்பதும் ஒரு உண்மை.

 ஆமிர் கான், தன்னுடைய தூம்-3 படத்தின் விளம்பரத்தைச் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் வெளியிட்டதுக்கும் இதுபோன்றக் காரணங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

  இவை அனைத்திற்கும் ஒரு முக்கிய காரணம், தமிழகம் திரைத்துறைக்கு ஒரு பெரிய சந்தை என்பதுதான். வந்தவர்களை வாழவைக்கும் மண். இன்றும் அந்தப் பண்பை விடாது பிடித்துக்கொண்டிருக்கிறது.

  தமிழகத்தை நோக்கி விரைவில் ஜாக்கி சான் கூட படையெடுத்தாலும் வியப்புக்கொள்வதற்கில்லை....

No comments:

Post a Comment