Monday, 6 January 2014

மாற்றங்கள்... தடுமாற்றங்கள்... ஏமாற்றங்கள்....

சிந்தனைக்குள் சிற்பம் ஒன்றைச் செதுக்கினேன்
  சிரமங்கள் பலகடந்து உருவங் கொடுத்தேன்...

தடைகள் பல வந்து அதைச் சிதைக்கமுயல
  தட்டுத் தடுமாறினேன்; திணறினேன்

தடுமாற்றங்கள் என்னை ஆட்டிப் படைக்க
  கைகள் நழுவி உளியினைத் தொலைத்தேன்

முடிவுறாத சிற்பத்தை நிதமும் கண்டழுதேன்
  புலம்பினேன்; கருத்தின் நிலையிழந்தேன்

சட்டென்று கண்விழித்தேன்; மெய்யுணர்ந்தேன்
  விழுந்தது உளிதானே; உயிரல்லவே

தடுமாற்றங்கள் வெறும் மாற்றங்கள் தானே
  ஏமாற்றங்கள் அல்லவே

மண்டியிட்டேன்; தேடினேன்; உளியைக் கண்டெடுத்தேன்
  சிற்பத்தைச்  செதுக்கி முடித்தேன்.....

No comments:

Post a Comment