நேற்று கல்லூரி விட்டு வீடு திரும்பியவுடன் சற்று இளைப்பாற தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்துக்கொண்டிருந்தன். அப்போது ஒரு தொலைக்காட்சி ஒன்றில் புதிதாக ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக சனி மற்றும் ஞாயிறு மாலை வேளைகளில் திரைப்படங்களை ஒளிபரப்பி நம் நேரத்தை எடுத்துக்கொள்ளும் தொலைக்காட்சி, நேற்றும் என் நேரத்தைப் பறித்துக்கொண்டது.
உலகநாயகன், சூப்பர் ஸ்டார், தல, தளபதி, என்று ஒரு பெரிய ஆதிக்க வரம்பிற்குள் மாட்டிகொண்டிருக்கும் திரை உலகம் எத்தனை நல்ல நடிகர்களையும் கலைஞர்களையும் தொலைத்திருக்கிறது என்று அந்த படத்தை பார்த்து மீண்டும் ஒருமுறை வருந்தினேன்.
அந்த திரைப்படத்தில் நடித்த கதை நாயகி ஏற்கனவே "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தில் நாயகியாக நடித்திருந்த காயத்ரி தான்.
நான் பார்த்த முதல் காட்சியிலேயே அந்த திரைப்படம் என்னைப் பெரிதாகக் கவர்ந்துவிட்டது. வெறும் நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே பங்குபெற்றிருக்கும் ஒரு காட்சியை, வெகு நாட்களுக்குப் பிறகு நான் பார்த்த்தேன். கீதா, சித்தாரா, இளவரசு, கிட்டி, என ஒரு குணசித்திர நடிகர் பட்டாளமே அந்த படித்தில் நடித்திருந்தனர். அதுபோக புதுமுக நாயகன் ஜெயன், அபாரமாக ஒரு எதார்த்தத்தை வெளிப்படுத்தினார். நாயகி காயத்ரி சோகமாகவே பல காட்சிகளில் தோன்றினாலும் பாத்திரத்துக்கு பொருந்தும் வேலையே செய்துள்ளார். பாவம் ஆனால் இருவரும் இப்போது எங்கே இருக்கிறாகள் என்று திரையுலகதிற்குதன் தெரியும்.
ஒளிப்பதிவாளர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவரை ஒளிப்பதிவாளர் என்றழைப்பதை விட கலைப்பதிவாளர் என்றே அழைக்கவேண்டும். தன் படபிடிப்புக்கருவியை எப்படியெல்லாம் பயன்படுதமுடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தியுள்ளார். நிச்சயமாக ஒரு பெரிய திறமைசாலியை தவறவிட்டிருக்கிறோம்.
+Tamil+Movie+Poster.jpg)
இயக்குநர் பலவித வித்தியாசமான நிகழ்வுகளை பதிவுசெய்ய முயற்சித்திருக்கிறார். அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
மிகைப்படுத்தப்பட்ட வசனங்கள், வாயில் நுழையாத மருத்துவப்பெயர்கள், ஆபாச வன்முறை, இரட்டை அர்த்த மொழிகள், என்று எதுவும் இல்லாமல் படம்பிடித்திருக்கிறார். பெரியதாக ஒரு கதை அம்சம் இல்லை என்றாலும் இந்த ஒரு சின்ன கதையையும் இவ்வளவு அழகாக பதிவு செய்ய முடியும் என்று உணர்த்தியிருக்கிறார்.
இளவரசு தனது வழக்கமான கேலி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கீதா சோகத்தை நன்றாகப் பரிமாறியிருக்கிறார். சித்தாரா மற்றும் கிட்டி அவரவர் பாத்திரத்தில் கச்சிதம்.
நாயகனைத் தவிர மற்ற அனைவரும் தெரிந்த நடிகர்கள் என்றாலும் இந்த திரைப்படம் வெற்றிஆகத காரணம் இந்த ஆதிக்க வரம்புதன். தயாரிப்பாளரும் விளம்பரத்தை பலப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் இந்த ஆதிக்க வரம்பிற்குள் இது போன்ற சிறிய தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் திரைப்படத்தை வெளியிட திரையரங்கு கிடைப்பதே பெரிய சிரமம். இந்த பொங்கலுக்கு வெளிவரும் தல தளபதி படங்கள் கூட மதுரை, திருச்சி, போன்ற நகரங்களின் பெரும்பாலான திரையரங்கங்களை ஆக்கிரமித்துக்கொண்டு சிறு படங்களை வளர விடாமல் தடுக்கின்றனர்.
தானும் வளர்ந்து மற்றவர்களையும் வளர வைத்து வளருவது தன் உண்மையான வளர்ச்சி என்பதை அவர்கள் எப்போது உணருவார்களோ???
இத்தனைக்கும் நான் மேல எழுதி உள்ளது சென்ற வருடம் வெளி வந்த "மதாப்பூ" என்ற திரைப்படத்தைப் பற்றித்தான். அப்படி ஒரு படம் வெளிவந்ததே நம்மில் பலருக்கு தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்.
இப்படி ஒரு படத்தில் மட்டும் ஒரு நடிகர், நடிகை, இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என்று பலரை தொலைத்திருக்கிறது இந்த திரைத்துறை. இது போன்று எத்தனை கலைஞர்கல் வருடாவருடம் காணமல் போகிறார்களோ???
நம்மைப் போன்ற ரசிகர்களும் பல நல்ல திரைப்படங்களை காணும் அதிர்ஷ்டத்தைத் தவறவிடுகிறோம்!!!!

No comments:
Post a Comment