அது 1936ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள். அன்றைய பிரிட்டன் தேசம் அந்த ஒலிம்பிக்கின் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கவில்லை. அது அதன் பிறகு வந்த 1944 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வரை எந்த ஒலிம்பிக் ஹாக்கியிலும் பங்கேற்கவில்லை. காரணம், இந்தியாதான் அன்று ஹாக்கியின் உலக சாம்பியன்.
தன்னிடம் அடிமை பட்டிருக்கும் நாட்டிடம் தோல்விபெற அது விரும்பவில்லை. பயந்துவிட்டது என்பதே சரி. அப்படித்தான் பலம்வாய்ந்திருந்தது அன்றைய இந்திய ஹாக்கி அணி. அது ஒன்பது முறை ஹக்கியில் தங்கப்பதக்கம் வாங்கியது. அதிலும் ஆறு முறை தொடர்ந்து வாங்கியது.
அப்படி ஆறு முறை தொடர்ந்து தங்கம் வாங்கிய அணியின் இன்றைய நிலை என்ன தெரியுமா? உலக சாம்பியன் போட்டியில் ஆறாவது இடத்திற்கான மோதல். இது ஒரு அவல நிலைதான். இது ஒரு புறம் இருக்கட்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த ஒரு கட்டுரை. ஒருவர் இப்போது ஆம்பூரில் உள்ள ஒரு மாட்டுத்தோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஒருகாலத்தில் இந்தியா விளையாடும் ஒரு விளையாட்டு அணித் தலைவராக இருந்தார். அது ஒரு பன்னாட்டு விளையாட்டு. அவர் தலைமையில் இருந்த இந்திய அணியானது, அந்த விளையாட்டின் உலகக்கோப்பையை மூன்று முறை வாங்கியுள்ளது. அதுபோக அது ஆசிய விளையாட்டு போட்டியிலும் பல சாதனைகளைப் புரிந்துள்ளது.
நான் அந்த அணித் தலைவரின் பெயரையோ, அந்த விளையாட்டின் பெயரையோ இங்கே குறிப்பிட விரும்பவில்லை. அவர் இப்போது வேலை பார்த்துக்கொண்டிருப்பது மேலே குறிப்பிட்டதுபோல ஒரு மாட்டுத்தோல் நிறுவனத்தில்தான். அவருடைய மாத ஊதியம் 1200 ரூபாய். இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்.
அபினவ் பிந்திரா, ககன் நராங்க், கர்ணம் மல்லேஸ்வரி, போன்றோரை நம்மில் எத்தனைப்பேருக்கு பதக்கம் வாங்கும் முன்பே தெரியும்?
இப்படி பிற விளையாட்டுகட்குப் பெரிய ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நாட்டில், ஏன் பொய் விளம்பரங்களில் நடிக்கும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு பாரத இரத்தின விருதை கொடுக்க மனம் வந்தது.

பாரத ரத்தினா என்ற விருதுக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். ஒன்றுமில்லத ஒரு சாக்லேட் பானத்தைக் காட்டி அதுதான் தன்னுடைய சக்தியின் ரகசியம் என்று பறைசாற்றிக்கொண்டிருந்த ஒரு விளையாட்டு வீரருக்கு மட்டும் எப்படி அந்த விருதை வழங்க முடியும். ஊரை ஏமாற்றும் விளம்பரத்தில் நடிதவருக்கு பாரத ரத்தினா. நாட்டுக்காக மூன்று முறை உலகக் கோப்பை வாங்கியவருக்கு 1200 ரூபாய் மாதச்சம்பளம். இதுவொரு வஞ்சகம் அல்லவா.
நானும் அந்த கிரிக்கெட் வீரனின் ஒரு மிகப்பெரிய ரசிகன். அவர் ஓய்வு பெற்றபோது எனக்கும் அது பெரிய வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அதையும் ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் வணிகமாக்கிவிட்டது. அவர் ஓய்வு பெற்றுச் சென்றபோது அதை ஒரு பெரிய நிகழ்வாக்கி பெரிய ஒரு லாபத்தைச் ஈட்டியது அந்த நிறுவனம்.
கிரிக்கெட்டைத் தாண்டி வேறு எந்த விளையாட்டையும் நாம் சிந்திக்கத் தவறும் இந்தச் சூழலுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் ஒளிந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளும் அவைகளின் கார்ப்பரேட்டின் பிடியில் நம்மைபோன்ற மூன்றாம் உலக நாடுகள் மாட்டிக்கொண்டிருப்பது உலகம் அறிந்த உண்மை.
நான் மேலே குறிப்பிட்டதுபோல இங்கிலாந்து தன்னுடைய அடிமையிடம் தோற்காமல் இருப்பதற்காக ஒலிம்பிக் ஹாக்கியைத் தவிர்த்ததும் அதுபோன்ற நிலையின் ஒரு உச்சக்கட்டம் தான். மேற்கத்திய தேசங்களின் பிடியில் மாட்டிக்கொண்டிருக்கும் நம் தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்க நடைபெறும் அரசியலே அது.
எங்கே இவன் வளர்ந்து நம்மையே மிஞ்சி விடுவானோ என்ற அச்சத்தில் இதுபோன்ற செயல்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு நம் நாட்டு அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் காரணங்களாக இருக்கிறார்கள். அவர்கள் மேற்கின் பிடியில் கிழக்கினை அடகு வைத்துவிட்டார்கள்.
அதனால் தான் ஒன்றுமில்லாத விடயங்களில் நம் நாட்டினை உட்படுத்தி, வளர்ச்சிக்குத் தேவையான விடயங்களில், அவர்கள் உயர்ந்து வருகிறார்கள்.
அதில், ரசாயன உரம், கருவேலமரம், பால் பதப்படுத்தும் முறைகளும் அடக்கம்.
அதை விடுங்கள், நம்முடைய தலைப்பிற்கு வருவோம். இது போன்று, ஒரு விளையாட்டை மட்டும் வளர்த்து, அதற்கு மட்டுமே செலவுசெய்து, அதில் மட்டுமே சூதாடி, அவர்களை மட்டுமே விருதளித்து கௌரவப்படுத்தினால், மேலே குறிப்பிட்டதுபோன்ற உண்மையான ஆட்டநாயகர்கள் என்ன ஆவார்கள்?
மேல்நாட்டவர், பணமுதலைகள், முதலாளிகள், போன்றோர்களின் பிடியில் சிக்கியிருக்கும் நம் சமூகத்தை நாம் எப்போது காப்பாற்றப்போகிறோம்?
நாம் ஒரு அரசியல் சிக்கலுக்குள் அடிமைப்படுத்தப்பட்டச் சமுகம். கிரிக்கெட்டும், அணு சக்தியும், செயற்கை விவசாயமும், ஆங்கிலமும், நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையன்று. அவையனைத்தும், நம்மில் புகுத்தப்பட்டவை. நம்மை அடிமையக்கியவை.
சல்லிக்கட்டையும், சேவல் சண்டையையும் அழித்து, தேசிய விளையாட்டையும் மறக்கச்செய்து, கிரிக்கெட்டை மட்டும் வளர்த்து அதனுள் அடிமைப்படுதப்படுகிறது நம் சமூகம். விழித்தெழுவோம்.
ஆட்ட நாயகர்கள் மறைக்கப்படுகிறார்கள்.
- சந்தோஷ் மாதேவன்
திருச்சி, சனவரி 19, 2014.

No comments:
Post a Comment