Saturday, 4 January 2014

பிரம்மாண்ட குரல் தேடலில் வெட்கக்கேடு

இந்த வார ஆனந்த விகடன் இதழில் சென்ற வருடத்தின் சிறந்தவர்களுக்கும் சிறந்தவைகளுக்கும் விகடன் விருதுகள் அறிவிக்கப்பட்டது சினிமா விருதுகளும் அடங்கும். அந்த வரிசையில் 2013இன்  சிறந்த பின்னணிப்  பாடகர் விருது ஹரிஹரசுதன் என்ற ஒரு பாடகருக்கு வழங்கப்பட்டது.




அவர் சென்ற வருடத்தின் அதிக வசூல் செய்த திரைப்படமான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்ற திரைப்படத்தில்  "ஊதா கலரு ரிப்பன்" எனத் துவங்கும் பாடலைப் பாடியதற்காக இந்த விருதை வாங்குகிறார்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் காலத்து குரலில் அவர் அந்த பாடலை மிக அழகாகப்  பாடியிருப்பார். அந்த பாடல் சென்ற வருடத்தின் வெற்றிப் பாடல்களில் ஒன்று. பல இளைஞர்கள் அந்தப் பாடலைத் தங்கள் கைபேசியின் அழைப்புமணியாக வைத்திருந்தனர். அந்தப் பாடலின் முழு வெற்றிக்குக் காரணம் அவருடைய அந்த மாறுபட்ட குரல்தான் என்பது நாடறிந்த உண்மை.

இக்கருத்தையே அந்த வார இதழும் கூறியிருந்தது. இது அவர் பாடிய முதல் திரையிசைப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடகர் ஒரு பிரபல தொலைகாட்சி நிகழிச்சி ஒன்றில் சில வருடங்களுக்கு முன்னர் பங்குபெற்றார். தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல் என்று குறிப்பிடப்பெறும் அந்த நிகழ்ச்சியில் அவர் சிறந்த 15 பாடகர் வரிசையில் கூட இடம் பெறவில்லை. அதற்கு முன்னரே அவர் அதில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதற்கு அந்த நடுவர்கள் கூறிய காரணம்:-

  உங்கள் குரலில் பெரிய ஈர்ப்புச் சக்தி இல்லை. இந்த குரலை வைத்து பெரியதாக சாதிக்க முடியாது.

என்பது போன்ற கருத்துக்களை அவர்கள் கூறினார்.

இந்த இடத்தில இசையமைப்பாளர் இமானுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் இவருக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.

 தமிழகத்தின் குரல் தேடல் என்ற பெயரில் மலையாள, கன்னட, ஆந்திர மற்றும் வடஇந்திய போட்டியாளர்களைப் பாட வைத்து ஹரிஹரசுதன் போன்ற பல தமிழ்ப் பாடகர்களின் திறமையைத் தரம் தாழ்த்தும் பணியில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்தக் குரல் தேடலில் வெளிநாட்டு வாழ் தமிழர்களும் பங்குபெறுகிறார்கள் என்பது இன்னும் பெரிய ஒரு கேவலம்.

தன் தொலைக்காட்சியின் விளம்பரத்தைப் பெரிதுபடுத்த ஏன் இப்படி ஒரு செயலில் இப்படி ஒரு பெயரில் தமிழர்களின் மானத்தைக் கெடுக்கவேண்டும்.

இதை நேயர்களான நாம்தான் உணர வேண்டும்.....

இது தமிழனுக்கே ஒரு வெட்கக்கேடு...

உண்மையை உணருவோம்...

No comments:

Post a Comment